பதுளை பொது வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் பதுளை சிவில் அமைப்பினர்கள் இணைந்து பதுளை பொது வைத்தியசாலைக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரச வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துகள் பிற மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் பாலித ராஜபக்ஷ கடந்த காலங்களில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
ADVERTISEMENT
அவருக்கு எதிராக சுகாதார அமைச்சு ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள எடுக்கப்பட தீர்மானத்துக்கு எதிராக குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.