திருகோணமலையில் “மாற்றத்தை நோக்கி நகர்வோம்” என்னும் தொனிபொருளில் கருத்தரங்கு ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
‘Youth motivation programme’ என்னும் இந்த கருத்தரங்கானது பிரபல தொழிலதிபர் பாஸ்கரன் கந்தையாவினால் முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த நிகழ்வானது எதிர்வரும் செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி காலை 10 மணியளவில் திருகோணமலை பிரதேசசெயலகத்துக்கு அருகிலுள்ள தபாலகவீதி, குளக்கோட்டன் கேட்போர்கூடத்தில் இடம்பெறவுள்ளது.
ADVERTISEMENT
இந்த கருத்தரங்கு நிகழ்வானது, தேசிய சமூக அபிவிருத்தி நிலைய சமூகப்பணி முதுகலை பட்ட மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.