கடந்த வாரம் வெளிவந்து மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் வாழைஇப்படத்தை தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தவர் மாரி செல்வராஜ். இயக்குனர் ராமிடம் துணை இயக்குனராக பணிபுரிந்த இவருக்கு பரியேறும் பெருமாள் திரைப்படம் நல்ல அறிமுகத்தை திரையுலகில் ஏற்படுத்தி கொடுத்தது.
இவருடைய சிறு வயதில் ஏற்பட்ட உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு தான் வாழை படம் உருவாகியுள்ளது. முதல் நாளில் இருந்த விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வாழை படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த நிலையில், வாழை திரைப்படம் கடந்த 4 நாட்களில் உலகளவில் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 4 நாட்களில் உலகளவில் ரூ. 12 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது வாழை.