தென் கொரியாவில் கடற்றொழில் துறையில் பணியாற்றும் வாய்ப்பு இலங்கைப் பெண்களுக்கும் கிடைத்துள்ளது.
கடற்றொழில் துறையில் தொழில் வாய்ப்பைப் பெற்ற 120 பேர் கொண்ட குழு நேற்று (25) கொரியாவுக்குச் சென்றதாக இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
அந்தக் குழுவில் மூன்று பெண்களும் உள்ளடங்குகின்ற நிலையில், தென்கொரிய அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி, இலங்கைக்கு இந்த தொழில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது.