• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, May 9, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப மக்கள் ஆதரவளிக்க வேண்டும்:  ஜனாதிபதி தெரிவிப்பு!

User1 by User1
August 27, 2024
in இலங்கை செய்திகள், நாட்டு நடப்புக்கள்
0 0
0
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப மக்கள் ஆதரவளிக்க வேண்டும்:  ஜனாதிபதி தெரிவிப்பு!
Share on FacebookShare on Twitter

நாடு எதிர்நோக்கும் எந்தவொரு சவாலையும் முறியடிக்கக் கூடிய திறமையான அணி தன்னிடம் இருப்பதாகவும், அரசாங்க நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்காக ஆரம்பித்திருக்கும் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதற்கு வழிவகுக்கும் சூழலை உருவாக்குவது நாட்டு மக்களின் பொறுப்பாகும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். 

கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நேற்று திங்கட்கிழமை (26) நடைபெற்ற இலங்கை தொழில் நிபுணர்களின் அமைப்பான OPA வின் 37 ஆவது வருடாந்த மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு   வலியுறுத்தினார்.  

இலங்கை நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அதுவே ஒரே வழியாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டதன் மூலம் இலங்கைக்கு கணிசமான நிவாரணம் கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ADVERTISEMENT

இந்த ஆண்டுக்கான வருடாந்த மாநாடு “இலங்கையின் பொருளாதாரம் நிலையான வளர்ச்சியை நோக்கி” என்ற தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் தொழில் நிபுணத்துவ சங்கங்களின் அமைப்பான OPA,  60,000 க்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட 34 துறைகளுக்குள் சேவை செய்யும் 52 உறுப்பினர் சங்கங்களை உள்ளடக்கிய அமைப்பாகும்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நினைவுப் பரிசும் வழங்கி வைக்கப்பட்டதுடன், இலங்கை தொழில் நிபுணத்துவ அமைப்பின் வருடாந்த சஞ்சிகையும் ஜனாதிபதிக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இலங்கையின் நிபுணத்துவ சங்கங்களின் அமைப்பு (OPA) 60,000 க்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட 34 துறைகளுக்கு சேவை செய்யும் 52 உறுப்பினர் சங்கங்களை உள்ளடக்கிய தொழில் வல்லுநர்களின் அமைப்பாகும்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,  

“மத்திய வங்கி ஆளுநர் நாட்டின் தற்போதைய பொருளாதார சூழலில் உக்கிரத்தன்மையை தௌிவுபடுத்தினார். அதிர்ஷ்டவசமாக, இரண்டு முக்கிய காரணங்களால் விரைவான பொருளாதார மீட்சியை அடைந்தோம். பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்காக பாடுபட்ட கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட பலமான குழுவொன்று என்னிடம் இருந்தது. இரண்டாவதாக, தேவையற்ற தாமதங்களைத் தவிர்த்து, முக்கியமான நடவடிக்கைகளை உடனடியாக எடுத்துள்ளோம். 

கிரீஸில் ஏற்பட்ட நிலைமை இலங்கையில் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதில் உறுதியாக இருந்தோம். கிரீஸ் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தை எட்டிய பிறகு, ஒரு தேர்தல் நடத்தப்பட்டது. பின்னர் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டதால் கிரீஸின் பொருளாதாரம் மேலும் சரிந்தது. எனவே கிரீஸ் மீண்டு வர சுமார் பத்தாண்டுகள் ஆனது. கூடிய விரைவில் குணமடைவதே எனது இலக்காக இருந்தது. நாம் இப்போது அதை செய்துள்ளோம். 

நிலையான பொருளாதார வளர்ச்சியைப் பேணுவதற்கு, சர்வதேச நாணய நிதியத்துடனான நமது ஒப்பந்தத்திற்கு இணங்குவது மிகவும் முக்கியமானது. அந்த உடன்பாட்டை எட்டுவது எளிதல்ல. சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் பல்வேறு கடன் வழங்கும் குழுக்கள் உட்பட பல தரப்பினருடன் நாங்கள் ஆலோசனை நடத்தினோம். 

அவற்றில் பெரிஸ் கழக நாடுகளும் இருந்தன. சீனா வித்தியாசமான அணுகுமுறையை கொண்டிருந்தது. எனவே இந்த சிக்கலான சூழ்நிலையில் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருந்தது. மேலும் எமில்டன் ரிசர்வ் வங்கியால் எங்களுக்கு எதிராக வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டு, நாங்கள் இன்னும் தனியார் கடன் வழங்குநர்கள் மற்றும் பத்திரதாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். 

சவால்கள் இருந்தபோதிலும், நாங்கள் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாடுகள் நெருக்கடியிலிருந்து எங்களை வெளியே கொண்டு வந்து, மக்களுக்கு வளர்ச்சி மற்றும் நிவாரணம் தொடர்பிலான நம்பிக்கையை அளித்துள்ளது. உதாரணமாக, எரிபொருள் விலைகள் குறைந்துள்ளன. ஏனைய துறைகளிலும் சாதகமான பிரதிபலன்கள் காணப்படுகின்றன. இந்த ஒப்பந்தத்தை மாற்ற வேண்டும் அல்லது அதிலிருந்து விலக வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் அது உண்மையல்ல. சர்வதேச நாணய நிதியத்துடன் நாம் செய்துள்ள ஒப்பந்தமே நெருக்கடியிலிருந்து மீள ஒரே வழி. இது எங்களுக்கு கணிசமான நிவாராணத்தை அளித்துள்ளது. 

நாம் ஏற்றுமதியை மையமாகக் கொண்ட பொருளாதாரமாக மாற வேண்டியது அவசியம். அதற்காவே பொருளாதார மாற்றச் சட்டம் , பொது நிதிச் சட்டம், மத்திய வங்கிச் சட்டம் மற்றும் பொருளாதார மாற்றச் சட்டம், அரச கடன் முகாமைத்துவச் சட்டம்  போன்ற பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முக்கிய சட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். அதன்படி, முதன்முறையாக ஒரு கொள்கையை சட்டமாக ஆக்கியுள்ளோம். அவ்வாறிருக்க, தலைமை மாற்றம் அல்லது ஆட்சி மாற்றத்தினால் அதனை இலகுவாக மாற்ற முடியாது. 

நாம் இப்போது போட்டித்தன்மை மிக்க ஏற்றுமதி பொருளாதாரமாக மாறுவது குறித்து  கவனம் செலுத்த வேண்டும். அந்த இலக்கை அடைவதற்கு, ஆடை கைத்தொழில் போன்ற துறைகளில் அதிக உற்பத்தித் திறன் தேவைப்படுகிறது. அவற்றை கொண்டு உயர்தரச் சந்தைகளுக்குள் பிரவேசிக்க வேண்டும். 

மேலும், உலக அளவில் அதிகரித்து வரும் உணவுத் தேவையைப் பயன்படுத்தி விவசாயத்தை நவீனமயமாக்க வேண்டும். தற்போது பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தப்படாத சுமார் 300,000 ஏக்கர் நிலப்பரப்பை பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தப்படலாம். நெல் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். விவசாயம் மற்றும் பால் பண்ணை மற்றும் புதிய பயிர் உற்பத்திக்காக பெருமளவான காணிகளை விடுவிக்க தீர்மானித்துள்ளோம். 

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளோம், அதன் மூலம் ஒரு இரவுக்கான வருவாயை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். எனவே, சுற்றுலா மற்றொரு முக்கிய துறையாக மாறுகிறது. விநியோகச் சங்கிலிகளை விரிவுபடுத்துதல், உயர்-தொழில்நுட்ப தயாரிப்புகளை உருவாக்குதல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட டிஜிட்டல் மயமாக்கலுக்கான ஆரம்ப பிரவேசம் ஆகியவையும் முக்கியமானவை. அதற்குத் தேவையான மனித வளத்தை உருவாக்க தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தி நான்கு புதிய பல்கலைக்கழகங்களை நிறுவ இருக்கிறோம். 

எதையாவது தொடங்குவதில் தான் சவால் இருக்கிறது. அதற்கான திறமை எங்களிடம் உள்ளது. சரியான சூழல் இருந்தால் எமக்கு வெற்றி பெறலாம். நாங்கள் எந்த பாதையில் செல்ல வேண்டும் என்பதை நீங்கள் தான்  தீர்மானிக்க வேண்டும். எனவே நீங்கள் சரியான முடிவை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.     

மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, இலங்கை தொழிற்சங்கங்களின் அமைப்பின் தலைவர் சரத் கமகே, ஓபிஏ 37வது உச்சி மாநாட்டுக் குழுவின் தலைவரும்,  அமைப்பின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட தலைவருமான சுஜீவ லால் தஹநாயக்க, சங்கத்தின் பொதுச் செயலாளர் திசர டி சில்வா மற்றும்  அதிகாரிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  

User1

User1

Related Posts

யாழ். பல்கலை பொன்விழா பிரமாண்டமாக பிரான்ஸில்.!

யாழ். பல்கலை பொன்விழா பிரமாண்டமாக பிரான்ஸில்.!

by Mathavi
May 9, 2025
0

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பொன்ழா நிகழ்வுகள் பிரான்ஸில் ஜூன் 8 ஆம் திகதி பிரமாண்டமான முறையில் கொண்டாடுவதற்கான ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பிரான்ஸ் தலைநகர், பாரிஸின் புறநகர்ப் பகுதியான...

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான உலங்கு வானூர்தி விபத்து.!

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான உலங்கு வானூர்தி விபத்து.!

by Mathavi
May 9, 2025
0

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 உலங்கு வானூர்தி ஒன்று இன்று காலை 8.17 மணியளவில் விபத்துக்குள்ளானதாக விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஹிங்குரக்கொட முகாமில் இருந்து...

கிண்ணியா நகர சபைக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் ஒரே கட்சியில் தெரிவு.!

கிண்ணியா நகர சபைக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் ஒரே கட்சியில் தெரிவு.!

by Mathavi
May 9, 2025
0

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரர்கள் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டியுள்ளார்கள். கிண்ணியா நகர சபைக்கான உள்ளூராட்சி...

யாழைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!

யாழைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!

by Mathavi
May 9, 2025
0

அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் தமிழ்ப் பொலிஸ் உத்தியோகத்தர் நேற்றைய தினம் மாலை 6:00 மணியளவில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார். தனது கடமை முடிந்து ஆற்றில்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை.!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை.!

by Mathavi
May 9, 2025
0

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ,...

சலுகைகளுக்காக வாக்களிப்பவர்கள் தமிழ் மக்கள் அல்ல..!

சலுகைகளுக்காக வாக்களிப்பவர்கள் தமிழ் மக்கள் அல்ல..!

by Thamil
May 8, 2025
0

"கசிப்பும் பணமும் கொடுத்து தமிழரசுக் கட்சி வாக்கு சேகரித்தது என்பதை அமைச்சர் விமல் ரத்நாயக்க நாடாளுமன்றுக்கு வெளியில் வந்து ஆதாரங்களுடன் நிரூபித்துக் காட்டவேண்டும்" என வலியுறுத்தியுள்ள இலங்கை...

யாழில் பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழப்பு..!

யாழில் பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழப்பு..!

by Thamil
May 8, 2025
0

யாழில் பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை நேற்றிரவு உயிரிழந்துள்ளது. நீர்வேலி தெற்கு, நீர்வேலிப் பகுதியைச் சேர்ந்த விஜிகரன் கேனகா என்ற பிறந்து ஏழு நாட்கள் நிரம்பிய...

மனைவி பணம் கொடுக்காததால் இளம் குடும்பஸ்தர் உயிர்மாய்ப்பு..!

மனைவி பணம் கொடுக்காததால் இளம் குடும்பஸ்தர் உயிர்மாய்ப்பு..!

by Thamil
May 8, 2025
0

யாழில் போதைப்பொருள் பாவிப்பதற்கு மனைவி பணம் கொடுக்காததால் இளம் குடும்பஸ்தர் ஒருவர் இன்றைய தினம் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். அராலி - வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த...

தனக்குத் தானே தீ வைத்த இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு..!

தனக்குத் தானே தீ வைத்த இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு..!

by Thamil
May 8, 2025
0

தீக் காயங்களுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். மன்னார் - மடு பகுதியைச்...

Load More
Next Post
இன்றைய வானிலை

இன்றைய வானிலை

முன்னாள் அமைச்சர் பௌசிக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை

முன்னாள் அமைச்சர் பௌசிக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை

நாட்டில் பட்டாசு உற்பத்தி அதிகரிப்பு !

நாட்டில் பட்டாசு உற்பத்தி அதிகரிப்பு !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி