2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் எல்பிட்டிய பிரதேச சபைக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்வது தொடர்பான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
எல்பிட்டிய பிரதேச சபையின் தவிசாளரையும் உப தவிசாளரையும் உறுப்பினர்களையும் தெரிவு செய்வதற்கான தேர்தலுக்கான பெயர் குறித்த நியமனங்களைக் ஏற்றுக் கொள்வது தொடர்பான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
அந்த அறிவித்தலில் குறிப்பிடப்படுவதாவது,
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான வைப்புப் பணத்தை ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ள முடியும்.
இந்நிலையில், எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான பெயர் குறித்த நியமனங்களை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 09 ஆம் திகதியிலிருந்து செப்டெம்பர் 12 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை காலி மாவட்ட செயலகத்தில் ஏற்றுக்கொள்ளப்படும்.
இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற தேர்தல் ஆணைக்குழுவின் www.elections.gov.lk என்ற இணையத்தளத்தை பிரவேசிக்கவும்.