ஹொரணை – பொரலுகொட முதலீட்டு வலயத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த உயிரிழந்த பெண்ணின் கணவர் மற்றும் மூன்று வயது மகள் காயமடைந்துள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூவரும் ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த போது ஜீப் ரக வாகனம் ஒன்று பொரலுகொட முதலீட்டு வலயத்திற்கு திரும்பும் சந்திக்கு அருகில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
ADVERTISEMENT
இவ்வாறு உயிரிழந்த ஹொரணை வடக்கு உடுவையில் வசித்து வந்த கே. ஜி கிம்ஹானி 26 வயதான ஒரு குழந்தையின் தாயாவார்.
இந்த விபத்து தொடர்பில் ஜீப் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.