நடிகர் விஜயின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிப் பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
விஜய் மக்கள் இயக்கமாக செயல்பட்டுக் கொண்டிருந்த விஜயின் ரசிகர் மன்றம் தற்போது அரசியல் கட்சியாக மாறியுள்ளது.
ADVERTISEMENT
அக்கட்சியானது ‘தமிழக வெற்றி கழகம்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும், தேர்தலுக்கு முன் இருக்கும் இரண்டு வருடத்தை கட்சியைப் பலப்படுத்தும் பணிகளில் ஈடுப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது அக்கட்சியின் கொடிப் பாடல் வெளியாகியுள்ளது.