ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்காக 27 அரசியல் கட்சிகள் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.
மனிதநேய மக்கள் கூட்டணியில் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய லங்கா பொதுஜன கட்சி, ஜனநாயக மக்கள் காங்கிரஸ் மற்றும் தேசிய முன்னணி உள்ளிட்ட 27 கட்சிகள் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.
ADVERTISEMENT
இதேவேளை, கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன உள்ளிட்ட ஐக்கிய இடதுசாரி முன்னணியும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது.