கிராம உத்தியோகத்தர்கள் இன்று முதல் எதிர்ப்பு வாரமொன்றை பிரகடனப்படுத்தி ஒரு வாரத்திற்கு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டணியின் இணைத் தலைவர் நந்தன ரணசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ADVERTISEMENT
இதேவேளை குறித்த தொழிற்சங்க நடவடிக்கை கிராம உத்தியோகத்தர்களுக்கான புதிய சேவை யாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று மற்றும் நாளை பணியை விட்டு வெளியேறுவோம் என்று கிராம உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.