அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்கும் இலங்கை மகளிர் அணிக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி வெற்றியீட்டியுள்ளது.
இந்தப் போட்டியில் அயர்லாந்து அணியை 07 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
ADVERTISEMENT
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்களில் 06 விக்கட்டுக்களை இழந்து 145 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
பின்னர் 146 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 16 ஓவர் நிறைவில் 03 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியை பதிவு செய்தது.