கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த கடுகதி ரயிலில் மோதி நபரொருவர் உயிரிழந்துள்ளார். பிலிமத்தலாவ மற்றும் பெணிதெனிய ரயில் நிலையங்களுக்கிடையில் நேற்றிரவு இந்த சமப்வம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவரின் ஆள் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
ADVERTISEMENT
35 வயது மதிக்கத்தக்க நபரொருவரே உயிரிழந்துள்ளதாக பேராதணை பொலிசார் தெரிவித்துள்ளனர். சடலம் பேராதணை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.