மேல் மாகாணத்தில் 13,781 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இந்த வருடத்தின் ஓகஸ்ட் வரையான காலப்பகுதியில் 33,961 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 8,179 பேருக்கு டெங்கு தொற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
அதேநேரம் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு தொற்று உறுதியானவர்களில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.