மன்னார் நாவற்குழி A-32வீதியின் பூநகரி பரமன்கிராய் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியைச்சேர்ந்த 27வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு சென்று விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.
ADVERTISEMENT
எனினும் விபத்திற்கான காரணம் தொடர்பாக பூநகரி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்