(படங்கள் இணைப்பு)
வரலாற்று புகழ்பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நேற்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
ADVERTISEMENT
இன்று காலை பத்து மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளது.
அந்தவகையில் எதிர்வரும் 18ஆம் திகதி மஞ்சமும், 31ஆம் திகதி சப்பரமும், செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி தேர்த் திருவிழாவும், 2ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும்
மாலை கொடியிறக்கமும் நடைபெறும்.
அத்தோடு செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி பூங்காவனமும் செப்டம்பர் 4ஆம் திகதி வைரவர் உற்சவத்துடனும் மஹோற்சவம் நிறைவுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.



