நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் பணியாற்றும் இரு ஊழியர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறி, ஒருவர் மற்றைய ஊழியரை கத்தியால் குத்த முயற்சித்துள்ளார்.
குறித்த இரு ஊழியர்களும் நாடாளுமன்ற உணவு வழங்கல் பிரிவில் பணியாற்றுவதாகவும், கேக் துண்டு தொடர்பாக வாக்குவாதம் முற்றியதாகவும் கூறப்படுகிறது.
வாக்குவாதம் முற்றியதையடுத்து, இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.
இதன் போது உணவு ஆய்வு தொடர்பான சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட உணவு மற்றும் பானங்கள் துறை ஊழியர்கள் மோதலை சமரசம் செய்தனர்.