அரச தனியார் பேருந்துகள் இடையில் ஏற்பட்ட மோதல்களில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இம் மோதல் காரணமாக இலங்கை போக்குவரத்து சபையின் சாரதியையும் நடத்துனரையும் கைது செய்ய கோரிக்கை முன் வைத்து மஸ்கெலியா நகரில் இருந்து சேவையில் ஈடுபட்டு வரும் தனியார் பேருந்து சேவைகள் அனைத்தும் தற்போது சேவையில் இருந்து விலகி கொண்டு உள்ளனர்.
ADVERTISEMENT
இதனால் சாமிமலை, ஹட்டன், காட்மோர், நல்லதண்ணி, மற்றும் ஏனைய தனியார் பேருந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்க பட்டு உள்ளது.
இதனால் பாடசாலை மாணவர்கள் மற்றும் பயனிகள் பாரிய சிரமத்திற்க்கு உள்ளாகி வருகின்றனர்.