மீன் விற்பனைக்கு பயன்படுத்தப்படும் பெட்டியை மோட்டார் சைக்கிளில் கட்டி நீர்கொழும்பு, கட்டான பிரதேசங்களில் மீன் விற்பனை என்ற போர்வையில் கசிப்பு விற்பனை செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சுமார் 200,000 ரூபா பெறுமதியான கசிப்பு கையிருப்புடன் இன்று (12) காலை கட்டுநாயக்க பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ADVERTISEMENT
சந்தேக நபர் 44 வயதுடைய ஹீனடியன பகுதியைச் சேர்ந்தவராவார். இவர் பல ஆண்டுகளாக இவ்வாறு கசிப்பு விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.