யாழ்.பல்கலைக்கழக மாணவர்களினால் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் ஈடுபபட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளமையால் கொழும்பு – யாழ்ப்பாணம் ஏ9 வீதியை முடக்கி, மக்கள் எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனம் செய்து, யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் முன்னெடுக்கப்பட்ட இம்மாபெரும் எதிர்ப்புப் போராட்டத்தை அடக்க, பொலிஸ் அடக்குமுறை பயன்படுத்தப்பட்டுள்ளதோடு, போராட்டக்காரர்கள் மீது தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
இதன்போதே பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட ஏழு பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.