இலங்கையின் 76வது குடியரசு தினம் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த நாளை கறுப்பு தினமாக அனுஷ்டிக்குமாறு கோரி வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் சமூகத்தினர், சமூக சிவில் அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அழைப்பு விடுத்தன.
அந்தவகையில் இன்றையதினம் அம்பாறை மாவட்டத்தில் கறுப்பு தின போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ADVERTISEMENT
இந்த போராட்டத்தில் சிவில் சமூக அமைப்பினர், காணாமல் ஆக்கப்பட்வர்களது உறவுகள், பொதுமக்கள், தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் என்பன இணைந்து பதாகைகளை ஏந்தி, கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.