வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் மரணமடைந்த நிலையில் அவருக்கு கோவிட் தொற்று இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.
அனுராதபுரம், பதவியா பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபர் சிறுநீரகநோய் காரணமாக வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ADVERTISEMENT
எனினும் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் (02.01.2024) இரவு உயிரிழந்துள்ளார்.
பதவியா பிரதேசத்தை சேர்ந்த 55 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வவுனியாவில் ஒரு வருடங்களிற்கு பின்னர் மீண்டும் ஒருவர் கோவிட் தொற்றால் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது