28.4 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து செங்கொடிசங்கத்தின் தலைவர் செல்லையா சிவசுந்தரம் கருத்து

கம்பெனி நிர்வாகங்கள் கூட்டு ஒப்பந்தம் நிறைவேற்ற படாது சம்பள நிர்ணய சபை மூலமாக வழங்கப்படும் சம்பளத்தையும் வழங்க முடியாது என அறிவித்து,


வழக்கு தொடர்வதும் பெருந்தோட்ட தொழிலாளர்களை அடிமைகள் போல் வேலை வாங்குகின்றனர். இதை தொழிற் சங்க
நடத்தும் அரசியல் தலைவர்கள் வாய் மூடி மௌனிகளாக இருக்கின்றனர்.

இது எதிர்காலத்தில் அரசியல் ரீதியாகவும், மற்றும் தொழிற்சங்க ரீதியாகவும் பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என செங்கொடி
சங்கத்தின் தலைவர் செல்லையா சிவசுந்தரம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் ஆரம்ப காலகட்டங்களில் பெருந் தோட்டங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் ஏறக்குறைய 10 லட்சம் பேர் இருந்தனர்.

ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தம், சிறிய நீர்த்தேக்கங்கள் அமைத்தல் திறமையற்ற அதிகாரிகள் மூலமாக படிப்படியாக பெருந் தோட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை 75,000 பேராக வீழ்ச்சியடைந்துள்ளது.

தற்போது நாட்டின் சீரற்ற பொருளாதார நிலை அத்தியாவசிய பொருட்களின் விளைவு உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் பெருந் தோட்ட தொழிலாளர்கள் இன்று பாரிய பாதிப்பினை அடைந்துள்ளனர்.

இத்தருவாயில் கம்பெனி நிர்வாகங்கள் கூட்டு ஒப்பந்தத்தை நிறைவேற்றாமல் முறைசாரா முறை மூலமாக தோட்ட பராமரிப்பு வேலைகளை செய்யாது நிரந்தர தொழிலாளர்களை தற்காலிக தொழிலாளர்களாக மாற்றி அவர்களிடம் மேலதிகமான வேலைகளையும் பெற்று வருமானத்தை அதிகரிக்கும் வேலைகளிலேயே ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாகவே தோட்டங்களும் காடாகி வருகிறது.

ஆரம்ப காலகட்டங்களில் தொழிலாளர்களின் உரிமைகள் தொழிற்சங்க போராட்டங்களின் மூலமாக கிடைக்கப்பெற்றது.

குறிப்பாக இப் போராட்டங்களில் இது சாரி தொழிற்சங்கங்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்தது. தற்போது தொழிற்சங்க தலைவர்கள் கட்சி அரசியலில் ஈடுபட்டு வந்ததாலும் தங்களது வாக்குறுதிகளை தக்கவைத்து கொள்வதற்காக தொழிலாளர்களை கட்சி ரீதியாக பிரித்தாள்வதும் அரசாங்கத்தால் வழங்கப்படும் அரச சீர்திருத்த நிதிகளை கட்சி சார்ந்தவர்களுக்கு மாத்திரம் வழங்குவதும் தொழிலாளர்களும் அற்ப சலுகைகாக அணி சேர்வது போன்ற காரணங்களால் தொழிலாளர்களின் உரிமைகள் வென்றெடுக்க முடியாமல் போன தோடு தொழிலாளர்கள் மாற்று தொழிற் சங்கங்களை அரசியல் எதிரிகளாக பார்க்கின்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இது பெருந்தோட்ட கம்பெனிகளுக்கு சாதகமாகவும் படிப்படியாக பெருந்தோட்ட தொழிலாளர்களின் உரிமைகள் பரி போனதோடு கம்பெனி நிர்வாகங்களுக்கு இடையே சர்வாதிகார போக்கு தலை தூக்கியது.

தொழிலாளர்கள் கூட்டு ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாது எனவும் தற்போது வழங்க வேண்டிய சம்பளத்தையும் வழங்க முடியாது எனவும் கூறியதோடு வழக்கு தாக்கல் செய்வது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இது எதிர்காலத்தில் அரசியல் ரீதியாகவும் வர்க்க ரீதியாகவும் மலையகத்தில் பாரியதொரு பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆகவே பெருந்தொடு தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் வாழ்வாதாரத்தை சீர்திருத்தவும் தொழிற்சங்க அரசியல் பேதங்களை மறந்து வர்க்க ரீதியாக ஒன்று பட்டு தொழிலாளர் போராட வேண்டும்.

அரசியல் தொழிற்சங்க தலைவர்கள் சம்பள உயர்வு கூட்டு ஒப்பந்தம் நிறை வேற்றல் காணி பகிர்ந்தளித்தல் போன்ற விடயங்களில் நடாத்தும் அரசியல் நாடகங்கள் நடாத்துவகை விடுத்து உண்மையான உரிமைகளை வென்றெடுக்க முன்வர வேண்டும் என தலைவர் செல்லையா சிவசுந்தரம் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

யாழ்.பல்கலை மாணவன் மீது பொலிஸார் கொலைவெறித்தாக்குதல்!

sumi

வனஜீவராசிகள் திணைக்கள காணி இந்து மயானத்துக்காக கிழக்கு ஆளுனரால் விடுவிப்பு!

User1

அதானியிடம் செல்லும் இலங்கையின் முக்கிய பங்கு

sumi

Leave a Comment