27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுக்களுடன் விமான நிலையத்தில் வர்த்தகர் கைது !

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுக்களை சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வந்த வர்த்தகர் ஒருவர் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

33 இலட்சம் ரூபா பெறுமதியான 22,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கிய 110 காட்டூன்களை கொண்ட சிகரெட்டுகளை பயணப் பையில் மறைத்து வைத்திருந்தபோது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் நீர்கொழும்பு, கொச்சிக்கடை, பல்லன்சேனையில் வசிக்கும் 47 வயதுடைய வர்த்தகராவார்.

சந்தேகநபர் அபுதாபியிலிருந்து விமானத்தில் இன்று புதன்கிழமை (04)  அதிகாலை 03.25 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், குறித்த நபரின் பயணப் பொதியில் மேலும் சட்டவிரோதமாக சிகரெட்டுகக்களை வைத்திருந்தமையால் மீண்டும் அவர் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் சிகரெட்டுக்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து வைத்திருத்தல் மற்றும் கடத்தல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில்  எதிர்வரும் புதன்கிழமை 11 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் அவரை ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கப்படும் தமிழ் பொது வேட்பாளரின் பெயர் அறிவிப்பு

User1

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் தலையிடப்போவதில்லை என ரஸ்யா தெரிவித்துள்ளது.

User1

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு!

User1

Leave a Comment