மாணவர்களுக்கான தலைமைத்துவ மற்றும் போதைப்பொருள் தடுப்புக்கான ஒருநாள் பயிற்சி நெறி நேற்று (29)
மல்வத்தை விபுலானந்த மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
ஒலுவில் அல் ஹம்றா மகா வித்தியாலய மாணவர்கள் 35 பேர் இப்பயிற்சி நெறியில் கலந்து கொண்டு சான்றிதழ்களையும் பெற்றனர்.
பொலிஸ் கெடட் பிரிவின் பணிப்பாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான திரு.சிந்தக குணரத்னவின் தலைமையில் மற்றும் நேரடி மேற்பார்வையில், பயிற்சி மற்றும் உயர் பயிற்சி சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த அவர்களின் வழிகாட்டலில் மாணவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி மற்றும் போதைப்பொருள் தடுப்புக்கான ஒருநாள் பயிற்சி முகாம் நடாத்தப்பட்டது.
இதில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தலைமைத்துவம் சம்மந்தமான பெறுமதியான விடயங்களை முன்வைத்தார்.
இப் பயிற்சி நெறியானது பொலிஸ் கெடட் பிரிவின் கட்டளைத் தளபதியின் மேற்பார்வையின் கீழ் பொலிஸ் கெடட் தலைமையகம் மற்றும் பொரலந்த பொலிஸ் கெடட் பயிற்சி நிலையத்தின் பொலிஸ் கெடட் ஆலோசகர்களால் நடாத்தப்பட்டது.
இப்பயிற்சி நெறிக்கு செல்வதற்கு நெறிப் படுத்தலை மேற்கொண்ட இணைப்பாடவிதானத்திற்கு பொறுப்பான பிரதி அதிபர் ஜே.வஹாப்தீன்,
அனுமதி ஒத்துழைப்பை வழங்கிய கல்லூரியின் முதல்வர் அஷ்ஷெய்க் யு.கே.அப்துர் ரஹீம் (நழீமி) அவர்களுக்கும் பாடசாலையின் கெடட் பிரிவுக்கு பொறுப்பான ஆசிரியர் லெப்டினன் ஏ.எம்.எம்.கியாஸ் மற்றும் பாடசாலையின் பிரதி, உதவி அதிபர்களுக்கும் மற்றும் பயிற்சிகளை வழங்கும் சுதர்சன் பி.சி. அவர்களுக்கும் எமது பாடசாலையின் கெடட் குழுவின் சி.கியூ (company quarter master) சறாபத் இஸ்னி ஆகியோருக்கும் பாடசாலை சமூகம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.