28.4 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

ஆறு மாதங்களில் 5000 பேருக்கு எலிக்காய்ச்சல் ! சுகாதாரப்பிரிவு மக்களுக்கு எச்சரிக்கை !

நாட்டில் இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் சுமார் 5,000 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழையுடனான காலநிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இரத்தினபுரி, காலி, கேகாலை, மாத்தறை, களுத்துறை, மொனராகலை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் இந்நோயால் அதிக ஆபத்துக்கள் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் உரிய சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிப்பது அவசியமென சுகாதார பிரிவினர் சுட்டிக்காட்டுகின்றனர்.இந்த நாட்களில் தசை வலி, தலைவலி, காய்ச்சல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் இருந்தால், முறையான மருத்துவ ஆலோசனையைப் பெறுவது கட்டாயமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

லிந்துலையில் சுகாதார காரியாலயத்தை வேறு இடத்திற்கு இடமாற்றுகோரி மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

User1

ஹெரோயினுடன் பிடிபட்ட புனர்வாழ்வு அதிகாரி

sumi

இளம் தந்தை கொடூரமாக வெட்டிக் கொலை

User1

Leave a Comment