குரங்கம்மை (mpox) என்னும் வைரஸ் நோய்த்தொற்று உலகையே அச்சுறுத்திவரும் நிலையில், அத்தொற்றால் அவதியுற்றுவரும் நாடுகளுக்கு தடுப்பூசிகளை தானமாக அளிக்க பிரான்ஸ் முன்வந்துள்ளது.
பிரான்சில் குரங்கம்மைக்கான தடுப்பூசிகள் தயாராகி வரும் நிலையில், அத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு 100,000 தடுப்பூசிகளை பிரான்ஸ் தானமாக வழங்கும் என அந்நாட்டு பிரதமரான கேப்ரியல் அட்டால் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலமாக குரங்கம்மைத் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குரங்கம்மையை, சர்வதேச சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.