கேடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிறகு, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்தவர் நடிகை தமன்னா.
இவர் பாகுபலி படத்தின் மூலம் பான் இந்திய நட்சத்திரமாக ஜொலித்து தனக்கென ஒரு இடத்தை ரசிகர்கள் மத்தியில் சம்பாதித்தார்
பிரபல கதாநாயகியாக இருப்பதால் இவர் விளம்பர நிறுவனங்களுக்கு மாடலாக நடித்திருந்தார். இதனால் சோப்பு மற்றும் நகைகள் வாங்கி விற்கும் விளம்பர நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்திருந்த தமன்னா தற்போது, உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடங்கியுள்ளார்.
அதில், நான் ஒப்பந்தம் செய்யப்பட்ட காலம் முடிந்த நிலையிலும் இந்த நிறுவனங்கள் நான் நடித்த விளம்பரங்களை பயன்படுத்துவதாக கூறினார். அதை தொடர்ந்து, இந்த வழக்கை விசாரணை செய்த போது, கோல்டு நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் ஆஜரானார், அங்கு அவர் தமன்னாவின் விளம்பரத்தை எங்கள் நிறுவனம் நிறுத்தி விட்டதாக தெரிவித்திருந்தார்.
மேலும், எங்கள் பழைய விளம்பரங்களை தனி நபர்கள் பயன்படுத்துவதால் எங்கள் நிறுவனம் அதற்கு பொறுப்பு ஏற்க முடியாது என்று வாதிட்டார். இதை தொடர்ந்து இந்த விசாரணையை வரும் செப்டம்பர் 12-ம் தேதி நீதிபதி தள்ளி வைத்துள்ளனர்.