27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

1700 ரூபாய் சம்பள விவகாரம்: மற்றுமொரு வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1,700 ரூபாவாக அதிகரித்து மீண்டுமொரு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

தொழில் ஆணையாளர் எம்.கே.கே.எஸ்.ஜயசுந்தரவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, நாளாந்த அடிப்படை வேதனமாக 1,350 ரூபாவும், உற்பத்தி அடிப்படையிலான ஊக்குவிப்பு கொடுப்பனவாக 350 ரூபாவுமாக 1,700 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு ஏதேனும் ஆட்சேபனைகள் காணப்படுமாயின் அதற்கான காரணங்களுடன் எதிர்வரும் 28ஆம் திகதி மதியம் 12 மணிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1,700 ரூபாவாக அதிகரித்து ஏலவே வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது.

இதனையடுத்து குறித்த வர்த்தமானி அறிவித்தல் மீளப் பெறப்பட்டதுடன் வேதன நிர்ணய சபையில் நேற்று முன்தினம் எட்டப்பட்ட தீர்மானத்துக்கு அமைய தற்போது புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

Related posts

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ச அறிவிக்கப்பட்டுள்ளார்.

User1

உரிய வேளையில் கட்டணம் செலுத்த தவறின் மின் துண்டிப்பு !

User1

ரணிலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆதரவு

User1

Leave a Comment