27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்

நாட்டில் எரிபொருள் – எரிவாயு விலையில் மாற்றம்…! வெளியான தகவல்

செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் வரை இலங்கையில் எரிபொருள் மற்றும் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என அரச வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனங்கள் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் எரிபொருள் மற்றும் எரிவாயு விலை திருத்தம் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட பெயர் குறிப்பிட விரும்பாத அரச உயர் அதிகாரி ஒருவர் ”எரிபொருள் மற்றும் எரிவாயு விலை செப்டம்பர் மாதம் வரை மாறாமல் இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

அத்துடன்,விலை நிர்ணய சூத்திரத்திற்கு ஏற்ப எந்தவொரு விலை திருத்தமும் தேர்தல் பிரச்சாரத்தில் சாதகமான அல்லது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மற்றுமொரு அரசாங்க வட்டார தகவல் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் தேர்தல் திகதி அறிவிக்கப்படுவதற்கு சில மாதங்களில் எரிபொருள் மற்றும் எரிவாயுவின் விலைகள் குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யுக்திய நடவடிக்கையின் போது 677 சந்தேக நபர்கள் கைது

User1

பதுளை மாவட்டத்தில் 7 இலட்சத்து 5772 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி – மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்

User1

கெஹலியவுக்கு விளக்கமறியல்.!

sumi

Leave a Comment