மஸ்கெலியா ஹட்டன் பிரதான வீதியில் குடா மஸ்கெலியா பகுதியில் மஸ்கெலியாவில் இருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தும் மணல் ஏற்றி வந்த பார ஊர்தி ஒன்றும் மோதிக் கொண்டது.
இதனால் ஹட்டன் மஸ்கெலியா போக்குவரத்து சுமார் இரண்டு மணி நேரம் முடங்கியது.
சம்பவம் நடந்த இடத்திற்கு மஸ்கெலியா பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் வந்து மோதிய வாகனங்கள் இரண்டையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்த பின்னர் மஸ்கெலியா ஹட்டன் பிரதான வீதி மீண்டும் வழமைக்கு திரும்பியது.
ADVERTISEMENT
இதனால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் இரண்டு மணி நேரம் காத்திருக்க நேரிட்டது.


