மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக குருநாகல் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி பீடி இலை மூட்டைகளுடன் நேற்று புதன்கிழமை (26) இரவு மன்னார் முருங்கன் பகுதியில் வைத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகுதி பீடி இலை மூடைகளை ஏற்றிச் மன்னாரில் இருந்து குருநாகலுக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில் நேற்று (26) இரவு மன்னார் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுடன் இணைந்து முருங்கன் பகுதியில் குறித்த வாகனம் சோதனை செய்யப்பட்டுள்ளது.
இதன் போது குறித்த வாகனத்தில் 36 பீடி இலை மூடைகள் பொதி செய்யப்பட்டு ஆயிரத்து 115 கிலோ கிராம் கொண்டு செல்லப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.
இதன் போது குறித்த வாகனத்தில் பயணம் செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் இந்தியாவில் இருந்து கடல் வழியாக மன்னார் பகுதிக்கு சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்டு பின்னர் மன்னாரில் இருந்து குருநாகல் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட இருந்ததாக தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 31 மற்றும் 29 வயதுடைய மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள் மற்றும் அவர்கள் கொண்டு செல்லப்பட்ட பாரவூர்தியுடன் சந்தேக நபர்களை மேலதிக விசாரணைக்காக முருங்கன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


