இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் வழிகாட்டலுடன் திருகோணமலை மாவட்ட செயலகம், திருகோணமலை மாவட்ட அறநெறிகள் சங்கம் இணைந்து நடாத்திய காரைக்கால் அம்மையார் மற்றும் திருவள்ளுவர் குருபூசை நிகழ்வு இன்று (15) சனிக்கிழமை திருகோணமலை விஸ்வநாத சுவாமி (சிவன்) ஆலய அன்னதான மண்டபத்தில் காலை இடம்பெற்றது.
இரெட்ணசிங்க பிள்ளையார் ஆலயத்தில் இருந்து காரைக்கால் அம்மையார் மற்றும் திருவள்ளுவரின் திருவுருவப் படங்களை தாங்கியவாறு ஆரம்பமான ஆன்மீக பேரணியானது ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம், முத்துக்குமாரசுவாமி ஆலயம் ஊடாக நடைபவனியாக விஸ்வநாத சுவாமி (சிவன்) ஆலயத்தை வந்தடைந்து அதன் பின்னர் ஏனைய கலை நிகழ்வுகள் உள்ளிட்ட நிகழ்வுகளும் இடம்பெற்றன.



