முப்படையில் இருந்து தப்பிச் சென்றுள்ள அனைவரையும் உடனடியாக கைது செய்யுமாறு பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொண்டா உத்தரவிட்டுள்ளார்.
நாட்டில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் தொடர்பில் பாதுகாப்புச் சபையானது கூடி இன்று (24) காலை ஆராய்ந்தது. இதில் கருத்து தெரிவிக்கும் போதே பாதுகாப்பு செயலாளர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.