மூத்த ஊடகவியலாளர் அமரர் இராஜநாயகம் பாரதிக்கு நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று சனிக்கிழமை காசல்ரீ பகுதியில் உள்ள சமஹவுஸ் விருந்தகத்தில் நடைபெற்றது.
நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் டக்லஸ் நாணயக்கார, செயலாளர் திலங்க காமினி, பொருளாளர் மு.இராமசந்திரன், தேசிய அமைப்பாளர் எஸ்.தியாகு மற்றும் நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர்கள் ஆகியோர் இணைந்து அன்னாரின் உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினர்.




