புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளராக இராசரட்ணம் விஜயகுமார் நியமிக்கப்பட்டு நேற்றையதினம் பதவியேற்றுள்ளார்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் காணப்பட்ட பிரதேச செயலாளர் பதவி வெற்றிடத்தினை நிவர்த்தி செய்யும் வகையில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளராக இராசரட்ணம் விஜயகுமார் அவர்கள் நேற்றையதினம் (03.02.2025) காலை தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நிர்வாக சேவையில் தெரிவுசெய்யப்பட்டு, முல்லைத்தீவு மாவட்ட கமலநல திணைக்களத்தின் உதவி ஆணையாளராகவும், வவுனியா கமநல திணைக்களத்தின் உதவி ஆணையாளராகவும், வவுனியா மாவட்டத்தின் பிரதி ஆணையாளராகவும், கொழும்பு கமநல திணைக்களத்தின் தலைமை காரியாலயத்தில் அபிவிருத்தி பிரிவின் ஆணையாளராகவும், அதன் பின்னர் பிரித்தானியா சென்று மேற்படிப்பை முடித்த பின்னர் நேற்றையதினம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக பதவியேற்றுள்ளார்.
பல்வேறு பட்டப்படிப்புக்களை படித்து பல்வேறு பிரிவுகளில் பணி புரிந்த நல்ல ஆளுமையுள்ள ஒருவர் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு புதிய பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.