திருகோணமலை கடற்கரையில் கடந்த வியாழக்கிழமை நீராடச் சென்று காணாமல்போன 4 இளைஞர்களில் 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இதில் ஒரு இளைஞன் தேடப்பட்டு வந்த நிலையில் இன்று ( 01 ) காலை அவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.
சீனக்குடா தானியகம பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.