சிவனடி பாத மலைக்கு இன்று காலை 6.45 மணியளவில் தரிசிக்க சென்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
டென்மார்க் நாட்டைச் சேர்ந்த 67 வயதுடைய ஜெப்டீன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
சிவனடிபாத மலைக்கு தரிசிக்க சென்ற குறித்த நபருக்கு ஊசி மலைப்பகுதியில், உடலில் ஏற்பட்ட வலிப்பு நோய் காரணமாக தவறி விழுந்துள்ளார். அவரை ஊசி மலைப்பகுதியில் உள்ள பொலிசார் நல்லதண்ணி நகருக்கு கொண்டுவந்து நோயாளர் காவு வண்டி மூலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வேளையில் உயிர் இழந்ததுள்ளார் என நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.
இவரது சடலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.