இந்திய தொலைக்காட்சியின் தொடர் நாடகம் ஒன்றில் நடித்து வரும் அமன் ஜெய்ஷ்வால் நேற்றைய தினம் (17)வீதி விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நடிகர் அமன், தனது நண்பர் அபிஷேக் மிஸ்ரா என்பவருடன் உந்துருளியில் நேர்காணல் ஒன்றுக்கு சென்றுள்ளார். இதன் போது ஜோகேஸ்வரி நெடுஞ்சாலையில் வைத்து டிப்பர் ரக வாகனம் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த நடிகர் அமன், உடனடியாக மீட்கப்பட்டு அங்குள்ள காமா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமன், ஒரு மணிநேரம் நடைபெற்ற சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
23 வயதாகும் இளம் சீரியல் நடிகரின் மறைவு சின்னத்திரையுலகினர், ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.