அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரன்தொம்பே ‘குடாகலபுவே’ பகுதியில் நேற்று (17) மதியம் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பலாங்கொடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து, சடலம் மீட்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பலபிட்டிய பதில் நீதவான் லூஷன் வடுதந்திரி விசாரணையை மேற்கொண்டார்.
மேலதிக பரிசோதனைகளுக்காக சடலத்தை பலபிட்டிய ஆதார வைத்தியசாலையின் பிரேத அறைக்கு அனுப்புமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.