தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு தைப்பொங்கல் நிகழ்வு இன்று (17) இடம்பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி. ஜெயகௌரி ஸ்ரீபதி தலைமையில் இடம்பெற்ற குறித்த தைப்பொங்கல் நிகழ்வில் விசேட பூஜை வழிபாட்டுடன் பொங்கல் பானையில் பொங்கல் வைத்து பகிர்ந்தளிக்கப்பட்டது. பூஜை வழிபாட்டினை பாரதிபுரம் முத்துமாரியம்மன் பிரதம குருக்கள் க.பரப்பிரமஜோதி நிகழ்த்தினார்.
குறித்த நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் உட்பட சக உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.