காலி, திக்கும்புர பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இமதுவ பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் காலி, அஹங்கம பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடையவர் ஆவார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
அஹங்கமவிலிருந்து இமதுவ நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று எதிர்த்திசையில் பயணித்த லொறி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது முச்சக்கரவண்டியின் சாரதியும் பின்புறத்தில் அமர்ந்திருந்த நால்வரும் காயமடைந்துள்ள நிலையில் அஹங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் முச்சக்கரவண்டியின் சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இமதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.