“தமிழ் எங்கள் உயிருக்கு நேர் ” என்ற தலைப்பில் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் கரைச்சி பிரதேச செயலகமும் கலாசார பேரவையும் இணைந்து நடாத்தும் கரைச்சி பிரதேச செயலக 2024ம் ஆண்டுக்கான கலாச்சாரப் பெருவிழா கரைச்சி பிரதேச செயலகத்தில் நடைபெற்று வருகிறது.
நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் கலந்து கொண்டுள்ளார். விருந்தினர்களாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளீதரன், வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள், கலைஞர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.