2024 இற்கான மாபெரும் சர்வதேச மனக்கணித போட்டியில் மடவளை யூசி மாஸ்(UCMAS) நிலைய மாணவர் அணி சாதனை படைத்துள்ளது.
கடந்த 14.12.2024 அன்று இந்தியாவின் புதுடில்லியில் நடைபெற்ற யூசி மாஸ் சர்வதேச மட்டப் போட்டியில் இலங்கையிலிருந்து 103 மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.
இந்த போட்டியில் உலகளாவிய ரீதியில் 30 இற்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சுமார் 6000 மாணவர்கள் பங்கேற்றனர்.
இவர்களில் மடவளை யூசி மாஸ்(UCMAS) கல்வி நிறுவனத்தில் கல்வி பயிலும் 8 மாணவர்களும் பங்குபற்றி வெற்றி கிண்ணங்களைப் பெற்று மடவளை பிராந்தியத்திற்கும் இலங்கைக்கும் பெருமையைச் சேர்த்துள்ளார்கள்.
அந்த வகையில் மய்மூனா இப்ராஸ் -1st runner up(லோயல் மகளிர் கல்லூரி), நிஹாரா திமந்தி- 2nd runner up( புனித அந்தோனியார் கல்லூரி ), யுனால் பஸ்னாயகே 3rd runner up (தர்மராஜ பாடசாலை கண்டி), ஹிலால் அஹமட் 3rd runner up (ஹில் கன்ட்ரீ சர்வதேச பாடசாலை), ஸபியா புகார்டீன் -3rd runner up,-ஸாலிஹா புகார் டீன் -3rd runner up, ஸல்ஹா புகார் டீன்- 3rd runner up (பதூர்தீன் மகளிர் கல்லூரி ), தானியா முபஸ்ஸிர் 3rd runner up ( இகோல் இன்டர்நெஷனல் ) ஆகியோர் வெற்றிக் கிண்ணங்களைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளார்கள்.
இவர்கள் அனைவரும் மடவளை யூசி மாஸ் நிறுவனத்தின் நிர்வாகி பாத்திமா ரசீனா, (Fathima Razeena), மற்றும் உதவி ஆசிரியை சசிகலா லக்மாலி (Shashikala Lakmali )ஆகியோரின் வழிகாட்டலில் இச்சாதனையை படைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.