கெப்பித்திகொல்லாவ பொலிஸ் பிரிவின் ஹெரத்ஹல்மில்லாவ பகுதியில் காட்டு மிருகங்களை கொல்லும் நோக்கில் சட்டவிரோதமான முறையில் பொருத்தப்பட்டிருந்த மின்கம்பியில் சிக்கி நேற்று திங்கட்கிழமை(16) மாலை ஒருவர் உயிரிழந்துள்ளதாக கெப்பித்திகொல்லாவ பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் 72 வயதுடைய ஹெரத்ஹல்மில்லாவ,கெப்பித்திகொல்லாவ பகுதியை வசிப்பிடமாக கொண்டவர் என்பது பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவருடைய சடலம் கெப்பித்திகொல்லாவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கெப்பித்திகொல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.