கல்முனை அஷ்ரஃப் ஞாபகர்த்த வைத்தியசாலையில் நிலவும் குருதிப் பற்றாக்குறை காரணமாக 13/12/2024 (வெள்ளிக்கிழமை) சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு மையம் (IHRM) அமைப்பின் அம்பாறை மாவட்ட குழு, சார்பாக வைத்தியசாலைக்கு குருதி கொடையாளர்களால் குருதி நன்கொடை வழங்கப்பட்டது. அமைப்பின் அம்பாறை மாவட்ட பணிப்பாளர் ஏ.ஜே.எப்.பைரோஸாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு அமைப்பின் தேசிய தலைவர் கலாநிதி ரீ.றிஸ் வான் காஸீம், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி ஏ.எல்.எப்.றஹ்மான் மற்றும் தர முகாமைத்துவ வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.ஆர்.எம்.ஹாரிஸ் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.இங்கு அமைப்பின் உயர் பீட உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு குருதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.