கல்வி அமைச்சின் ஆசிரியக் கல்வி ஆங்கில மொழிச் செயற்பாடுகளை விருத்தி செய்யும் நோக்கில் அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆங்கில வார இறுதிக் கண்காட்சி கல்வி மற்றும் தரமேம்பாட்டிற்கான உப பீடாதிபதி ஏ.ஜீ. அஹமட் நழிர் தலைமையில் இன்று (11) கல்லூரி ஆராதனை மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது பிரதம அதிதியாக கல்லூரியின் பீடாதிபதி சட்டத்தரணி கே. புண்ணியமூர்த்தி கலந்து கொண்டு கண்காட்சி கூடத்தினை நாடா வெட்டி திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் உப பீடாதிபதிகள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், கல்வியியலாளர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.