முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடிபோதையில் வாகனம் செலுத்தியதால் ஏற்பட்ட விபத்து ஒன்று தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.