உக்ரைன் தலைநகரைக் குறிவைத்து ரஷ்யா 90 இற்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் சுமார் 100 ஆளில்லா விமானத் தாக்குதல்களை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி விளாடிமீர் புட்டின், ரஷ்யாவின் புதிய ஹைப்பர் சோனிக் ஏவுகணை மூலம் கியேவில் உள்ள உக்ரைனின் கட்டளை மையங்களைத் தாக்கப்போவதாக அச்சுறுத்தியிருந்தார்.
இதனையடுத்தே நேற்று இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
அத்துடன் உக்ரைனுடனான யுத்தம் ஆரம்பிக்கப்பட்டுக் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளான நிலையில், தற்போது இரு தரப்பினரும் தாக்குதல்களை அதிகரித்துள்ளனர்.
அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில், அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப் பதவியினை ஏற்பதற்கு முன்னர் இரு தரப்பினரும் நவீன வலுவான ஆயுதங்களைப் பரஸ்பரமாகப் பிரயோகித்து வருவது குறிப்பிடத்தக்கது.