அலவ்வ – நெலும்தெனிய வீதியில் இன்று சனிக்கிழமை (23) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த பேருந்து ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக அலவ்வ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.