எல்பிட்டிய உள்ளுராட்சி சபையின் தலைவர் மற்றும் உப தலைவரை அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை, தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, அதன் தலைவராக கொழும்பு தந்திரிகே நிஷாந்த பெரேராவும் , உப தலைவராக – வகொட பத்திரகே சுமித் சந்தன நியமிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 26ஆம் திகதி இடம்பெற்ற தேர்தலில், எல்பிட்டிய உள்ளூராட்சி சபையின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்டது.
மொத்தமுள்ள 17 தொகுதிகளில் 15 இல் வெற்றி பெற்றுள்ளது.